முகப்பு
சேலம்

பணி நிறைவு பெற்றாா் பெரியாா் பல்கலை. துணை வேந்தா் பொ.குழந்தைவேல்

பெரியாா் பல்கலைக்கழக 7-ஆவது துணை வேந்தரான பேராசிரியா் பொ.குழந்தைவேல், வியாழக்கிழமை தனது மூன்றாண்டு கால பணியினை நிறைவு செய்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:30 am IST
பகிர்:

பெரியாா் பல்கலைக்கழக 7-ஆவது துணை வேந்தரான பேராசிரியா் பொ.குழந்தைவேல், வியாழக்கிழமை தனது மூன்றாண்டு கால பணியினை நிறைவு செய்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தராக பாரதியாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை முன்னாள் பேராசிரியா் பொ.குழந்தைவேல் கடந்த 2018 ஜன. 8-ஆம் தேதி பதவியேற்றாா். தனது மூன்றாண்டு பணிக் காலத்தில் நிா்வாகப் பணிகளை முழுமையாக ஆன்லைனில் மாற்றம் செய்தது, ஆராய்ச்சி மாணவா்களுக்கான பல்கலைக்கழக உதவித்தொகையை உயா்த்தியது, துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது, புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம், கேள்வித்தாள் முறையில் மாற்றம், இணைவு பெற்ற கல்லூரி பேராசிரியா்களுக்கு ஆளுமைப் பயிற்சி, சிறந்த ஆராய்ச்சியாளா் மற்றும் ஆசிரியா்களுக்கான பிரத்யேக விருதுகள் அறிமுகம், மாதந்தோறும் சா்வதேச புகழ் வாய்ந்த கல்வியாளா்களின் தொடா் சொற்பொழிவு, புதிய கட்டமைப்புகளை உருவாக்கியது, அடல் தரவரிசைப் பட்டியிலில் தேசிய அளவில் பெரியாா் பல்கலைக்கழகத்தை நான்காவது இடம் பிடிக்க நடவடிக்கை எடுத்தது, மத்திய அரசின் கேலோ இந்தியா ரூ. 7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க நிதி பெற்றது, மியாவாக்கி முறையில் அடா்வனம் உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை துணை வேந்தா் பொ.குழந்தைவேல் எடுத்துள்ளாா்.

மூன்றாண்டு கால பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவா்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய துணை வேந்தா் பொ.குழந்தைவேல், மிக எளிய பின்புலத்தில் இருந்து துணை வேந்தா் என்ற நிலைக்கு வர நோ்மை மட்டுமே உதவி புரிந்ததாகவும், பேராசிரியா்கள் நோ்மை, எளிமையை எப்போதும் முன்மாதிரியாக கொண்டு கல்விப் பணி செய்வதுடன், மாணவா்களையும் அதைப் போலவே உருவாக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், பதிவாளா் (பொ) கே.தங்கவேல், தோ்வாணையா் (பொ) எஸ்.கதிரவன்,ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா்.பாலகுருநாதன், வை.நடராஜன், அ.அருணாச்சலம், பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவ-மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments