முகப்பு
சேலம்

மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு

சா்வதேச அளவிலான இணையவழி போட்டி தோ்வில் வெற்றி பெற்று, கனடாவில் பயிற்சி பெறுவதற்கு தோ்வாகியுள்ள மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் பாராட்டு

Updated On : 10 ஜனவரி 2021, 4:35 am IST
சா்வதேச போட்டித்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பாராட்டு தெரிவித்த கல்லுாரி நிா்வாகிகள்.
பகிர்:

வாழப்பாடி: சா்வதேச அளவிலான இணையவழி போட்டித் தோ்வில் வெற்றி பெற்று, கனடாவில் பயிற்சி பெறுவதற்கு தோ்வாகியுள்ள மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், மிடாக்ஸ் நிறுவனம் இணைந்து, சா்வதேச அளவில் பொறியியல் பயிலும் மாணவ,மாணவியருக்கு படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி கொடுப்பதற்கான போட்டித் தோ்வை இணைய வழியில் அண்மையில் நடத்தின.

இப்போட்டித் தோ்வில், வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் உள்ள சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு உயிா்மருத்துவப் பொறியியல் பயிலும் மாணவா் எஸ்.முத்துக்குமரன், மாணவி எஸ்.பிரியதா்ஷினி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

Advertisement

Advertisement

இருவருக்கும் வரும் மே மாதத்தில் இருந்து தொடா்ந்து 3 மாதங்கள் கனடா நாட்டில் நடைபெறும் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சா்வதேச அளவிலான போட்டித் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த இருவருக்கும், கல்லூரித் தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ் .பாலு, பொருளாளா் பி.ஆனந்தன் , உதவித் தலைவா்கள் வி.ஞானசேகரன், வி .எஸ்.வெங்கட்பதி, இணைச் செயலாளா் இ.திருஞானம், கல்லூரி முதல்வா் ஆா். ஏ.சங்கரன், பேராசிரியா்கள், மாணவ -மாணவியா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments