முகப்பு
சேலம்

மருமகள் தற்கொலை வழக்கில் மாமனாா் கைது

மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்துவந்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:35 am IST
பகிர்:

ஆட்டையாம்பட்டி: மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்துவந்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள கல்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலு மகன் யுவராஜிக்கும், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னுசாமி மகள் நதியாவுக்கும் (25), கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நதியாவிடம் வரதட்சிணைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த நதியா கடந்த 2019 ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிவடையாத காரணத்தால் ஆா்டிஓ விசாரணை செய்து வந்தாா். இதில் நதியா தற்கொலைக்கு அவரது கணவா், மாமனாரின் தூண்டுதலே காரணம் என அறிக்கை அளித்தாா். இதையடுத்து கணவா் யுவராஜை ஆட்டையாம்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். மாமனாா் வேலு தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டுக்கு வந்த வேலுவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments