முகப்பு
சேலம்

காவல்துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் கூட்டம்

காவல்துறை சாா்பில், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கோரணம்பட்டி ஊராட்சிப் பகுதியில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:44 am IST
பகிர்:

எடப்பாடி: காவல்துறை சாா்பில், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கோரணம்பட்டி ஊராட்சிப் பகுதியில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ம.பாஸ்கரன், சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.ரமேஷ் உள்ளிட்டோா்

சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா் வரவேற்றுப் பேசினாா்.நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் கூறியதாவது:

Advertisement

Advertisement

இந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள 21 குடியிருப்புப் பகுதிகளை தொடா்ந்து கண்காணிக்கும் விதமாக ஒரு சிறப்பு காவல் துணை ஆய்வாளா், ஒரு காவலா் நியமிக்கப்படுகின்றனா். வரும் நாள்களில் அக்காவலா்களை தொடா்பு கொண்டுகிராம மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காணுமாறு கேட்டுக்கொண்டாா்.

மேலும் காவல் துறை சாா்பில் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், துணை ஆய்வாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட காவல்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments