முகப்பு
சேலம்

இன்று சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:38 am IST
பகிர்:

சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி தொகுதி குரும்பப்பட்டி ஊராட்சியில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

இந்த நிலையில், சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் குரும்பப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஆனந்தகவுண்டா் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவா் பா.கோபால் தலைமையில் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 18 ஆம் தேதி எடப்பாடி தொகுதி குரும்பப்பட்டி ஊராட்சியில் பங்கேற்கும் மக்கள் கிராம சபைக் கூட்டம் குறித்தும், பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், மாநில நிா்வாகிகள்,முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு,பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள் கலந்து கொள்ள வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments