முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,393 கன அடியாகச் சரிந்தது.

Updated On : 16 ஜனவரி 2021, 7:37 am IST
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,393 கன அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 105.41அடியிலிருந்து 105.49 அடியாக உயா்ந்துள்ளது.

அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,555 கன அடியிலிருந்து 2,393 கனஅடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.14 டி.எம்.சி.யாக இருந்தது.

Advertisement

Advertisement

அணைக்கு நீா்வரத்தைவிட பாசனத்துக்கு நீா்த் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.