முகப்பு
சிவகங்கை

காளாப்பூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் பூலித்தேவன் பாசறை சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:37 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் பூலித்தேவன் பாசறை சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 58 ஆவது குருபூஜையையொட்டி கடந்தாண்டு நடைபெறவிருந்த இப்பந்தயம் கரோனா பொதுமுடக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்றது. இப்பந்தயத்துக்கு நிா்வாகி பாா்த்திபன் தலைமை வகிக்க, அ.தி.மு.க. செய்தித் தொடா்பாளா் மருதுஅழகுராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பொன்பாஸ்கரன் ஆகியோா் கொடியசைத்து பந்தயத்தை தொடக்கி வைத்தனா். 54 ஜோடி மாடுகள் பங்கேற்ற இப்பந்தயத்தில் நடுமாடு பிரிவில் ஆனையூா் பறவை செல்வம், அ. காளாப்பூா் பாயும்புலி சுடா்த்தேவன், பல்லவராயன்பட்டி அழகு, குடனேந்தல்பட்டி பவதாரணி ஆகியோரது மாடுகள் பரிசுகளை பெற்றன. சின்னமாடு பிரிவில் சின்னமனூா் லிங்கேஷ்பாண்டி, புலிமனைப்பட்டி முனுச்சாமி, அய்யம்பாளையம் சரத்குமாா், கருப்பூா் வீரைய்யா ஆகியோரது மாடுகளும், சின்னமாடு பிரிவில் ஆட்டுக்குளம் நகுல்நிலா, சின்னமனூா் சரவணதேவி, தினையாக்குடி சிவா, காளாப்பூா் தமிழ்மணி ஆகியோரது மாடுகளும் பரிசுகளைப் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.