அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று(ஜூன் 15) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தென்காசி, விழுப்புரம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 22 districts, including Chennai, over the next three hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.