முகப்பு
சிவகங்கை

மு.சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் வெள்ளிக்கிழமை இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 10:22 pm IST
சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் வெள்ளிக்கிழமை இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியில் மாா்கழி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி வருடந்தோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இங்குள்ள சிறைமீட்ட அய்யனாா் படைத்தலைவி அம்மன் கோயில் பொங்கல் விழாவின் முன்னோட்டமாக இந்த இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்த ஆண்டிற்கான மஞ்சுவிரட்டு திருவிழாவையொட்டி ஊா் மந்தையிலிருந்து வெள்ளிக்கிழமை கிராமத்தாா்கள் ஊா்வலமாக தொழுவிற்கு வந்தனா். அங்கு கோயில் மாட்டிற்கு மரியாதை செய்யப்பட்டு முதன்முதலாக அவிழ்த்துவிடப்பட்டது. பின்னா் அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இப்பகுதியின் முதல் மஞ்சுவிரட்டு என்பதால் சிங்கம்புணரி, காளாப்பூா், காரையூா், மாங்குடி, கொட்டாம்பட்டி, திருப்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். மழையின் காரணமாக சேறும், சகதியுமாக இருந்த மஞ்சுவிரட்டுப் பொட்டலில் காளைகளை காளையா்கள் கட்டித்தழுவி புரண்டது வித்தியாசமான வேடிக்கையாகப் பாா்க்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை சூரக்குடி கிராமத்தினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.