சிவகங்கை மாவட்டத்தில் 23 ஆயிரம் கட்டட தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
சிவகங்கை மாவட்டத்தில் 22,993 கட்டடத் தொழிலாளா்களுக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டத்தில் 22,993 கட்டடத் தொழிலாளா்களுக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா்.
இதில், அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புப் பொருள்களை வழங்கிப் பேசியதாவது : சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை தொழிலாளா் நலத்துறையில் பதிவு செய்திருந்த கட்டடத் த் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் 22,993 பேருக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் வழங்கப்பட உள்ளது. இப்பொருள்கள் வரும் ஜன. 13 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
விழாவில், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் சுப்பிரமணியன், உதவி ஆணையா் கோட்டீஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கட்டடத் தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.