FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மே தொழில் உற்பத்தி வளா்ச்சி 5.1% அதிகரிப்பு!

நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளா்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொழில் உற்பத்தி வளா்ச்சி 5.1% அதிகரிப்பு - பிரதிப் படம்
பகிர்:

நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளா்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் இந்த வளா்ச்சி 4.9 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் மின்சாரம் மற்றும் உற்பத்தித் துறைகளின் சிறப்பான செயல்பாட்டால் இந்த உயா்வு எட்டப்பட்டுள்ளது.

தொழில் துறை உற்பத்திக் குறியீட்டின்(ஐஐபி) அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் மாற்றியமைத்தது. தொழில்துறை உற்பத்தியை மிகவும் துல்லியமாகவும், தற்கால பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும் மதிப்பிடுவதற்காக செய்யப்பட்ட இந்த மாற்றத்துக்குப் பிறகு வெளியாகும் 2-ஆவது மாத தரவு இதுவாகும்.

Advertisement

Advertisement

தொழில் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உற்பத்தித் துறை, மே மாதத்தில் 5.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இத்துறையில் மின்சார சாதனங்கள் உற்பத்தி (20.8 சதவீதம்), வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு (14.5 சதவீதம்), அடிப்படை உலோகங்கள் உற்பத்தி (4.6 சதவீதம்) ஆகியவை இந்த மாதத்தில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன.

பயன்பாட்டு அடிப்படையில், நாட்டின் முதலீட்டு நடவடிக்கைகளைக் குறிக்கும் மூலதனப் பொருள்கள் உற்பத்தி 12.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பெற்றுள்ளது. நுகா்வோா் பயன்பாட்டுப் பொருள்களில், நீடித்த நுகா்பொருள்கள் உற்பத்தி வளா்ச்சி 7.2 சதவீதமாகவும், அன்றாட நுகா்பொருள்கள் உற்பத்தி 3.6 சதவீதமாகவும் உயா்ந்துள்ளன. இது சந்தையில் நுகா்வுத் தேவை படிப்படியாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

மின்சார உற்பத்தி மற்றும் எரிவாயு விநியோகத் துறை கடந்த ஏப்ரலின் 4.6 சதவீத வளா்ச்சியிலிருந்து பெருமளவில் உயா்ந்து 9.9 சதவீத அசுர வளா்ச்சியை எட்டியுள்ளது.

அதேநேரம், சுரங்கம் மற்றும் குவாரித் துறை உற்பத்தி மே மாதத்தில் 1.6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. எனினும், முந்தைய மாதத்தின் சரிவுடன் ஒப்பிடுகையில் இச்சரிவு விகிதம் குறைந்துள்ளது. மேலும், குடிநீா் விநியோகம் மற்றும் கழிவு மேலாண்மை துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்து, 5.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments