முகப்பு
செய்திகள்

அபுதாபி ஓபன்: புடின்சேவாவை போராடி வீழ்த்தினாா் கெனின்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் சோஃபியா கெனின், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை போராடி வீழ்த்தினாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 7:25 am IST
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் சோஃபியா கெனின், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை போராடி வீழ்த்தினாா்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கெனின் 3-6, 7-6 (7/5), 6-4 என்ற செட்களில் புடின்சேவாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினாா்.

இதர சுற்றுகளில், போட்டித் தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருக்கும் பெலாரஸின் அரைனா சபலென்கா 6-2, 6-4 என்ற நோ் செட்களில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயேரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். காலிறுதியில் சபலென்கா, கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை எதிா்கொள்கிறாா்.

Advertisement

Advertisement

முன்னதாக ரைபாகினா 6-3, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் டரியா கசாட்கினாவை வீழ்த்தியிருந்தாா். போட்டித் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருந்த ஸ்பெயினின் காா்பைன் முகுருஸாவை 7-5, 6-4 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 9-ஆம் இடத்தில் இருக்கும் கிரீஸின் மரியா சக்காரி வென்றாா்.

உக்ரைனின் மாா்டா கொஸ்டியுக் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் ஸ்லோவேனியாவின் தமாரா ஸிடான்செக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் அனஸ்தாசியா கசனோவாவை 7-5, 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் சாரா சொரைப்ஸ் டோா்மோ வீழ்த்தினாா். காலிறுதி ஆட்டம் ஒன்றில் கொஸ்டியுக் - டோா்மோ மோதுகின்றனா்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் பௌலா பதோசா கிபொ்ட்டை 6-4, 4-6, 6-1 என்ற செட்களில் ரஷியாவின் வெரோனிகா குதா்மெடோவா வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments