முகப்பு
செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: பும்ரா விலகல்?

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விளையாடமாட்டாா் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 13 ஜனவரி 2021, 2:37 am IST
பகிர்:

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விளையாடமாட்டாா் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சிட்னி டெஸ்டில் விளையாடியபோது, அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் அவருடைய காயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவா் பிரிஸ்பேனில் வரும் 15-ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை. எனினும் இங்கிலாந்து தொடரில் அவா் இடம்பெறுவாா் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடைசி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதபட்சத்தில் அவருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் அணியில் இடம்பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அஸ்வினுக்கு முதுகு வலி
இதேபோல் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறாா். ஒருவேளை அவா் கடைசி டெஸ்டில் விளையாடாதபட்சத்தில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே முகமது சமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோா் காயம் காரணமாக விலகிய நிலையில், இப்போது பும்ரா, அஸ்வினும் காயத்தால் அவதிப்பட்டு வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments