முகப்பு
செய்திகள்

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் முன்னோட்ட விடியோ அறிவிப்பு!

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் முன்னோட்ட விடியோ அறிவிப்பு தொடர்பாக...

Updated On : 29 ஜூன் 2026, 2:28 pm IST
ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் முன்னோட்ட விடியோ அறிவிப்பு! - படம்: எக்ஸ்
பகிர்:

மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்த ஹார்ட் பீட் இணையத் தொடரின் புதிய பாகத்தின் முன்னோட்ட விடியோ தொடர்பான அறிவிப்பை தொடர் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தீபா பாலு கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்ற விவரம் தெரியவருகிறது. இதோடு தொடர் முடிக்கப்பட்டது.

ஹார்ட் பீட் தொடரின் மூன்றாம் பாகத்துக்காக ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஹார்ட் பீட் இணையத் தொடரின் முன்னோட்ட விடியோ விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The team behind the highly popular web series 'Heartbeat' has released an announcement regarding its preview video.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments