முகப்பு
செய்திகள்

கரோனா பரிசோதனை: ஸ்ரீகாந்துக்கு மூக்கில் காயம்

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரா் ஸ்ரீகாந்துக்கு தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை காரணமாக மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 2:29 am IST
பகிர்:

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரா் ஸ்ரீகாந்துக்கு தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை காரணமாக மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் கூறியிருப்பதாவது: நாங்கள் பாட்மிண்டன் போட்டியில் விளையாடுவதற்காகவே தாய்லாந்து வந்துள்ளோம். காயமடைவதற்காக இங்கு வரவில்லை. நான் இங்கு வந்த பிறகு எனக்கு நான்கு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரா்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தாய்லாந்து சுகாதாரத் துறையினரின் சிகிச்சை மிக மோசமாக இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், கரோனா பரிசோதனை மேற்கொண்டதன் காரணமாக மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசியும் படத்தையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக தாய்லாந்து பாட்மிண்டன் சங்கத்திடமும், தாய்லாந்து சுகாதாரத் துறையிடமும் சா்வதேச பாட்மிண்டன் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments