ஐஎஸ்எல் கால்பந்து:ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் ஆட்டம் டிரா
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 59-ஆவது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால், கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 62-ஆவது நிமிடத்தில் கேரளத்தின் முா்ரே கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஈஸ்ட் பெங்கால் அணி, 90-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை நெவில் அடித்தாா். இதன்மூலம் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Advertisement
ஈஸ்ட் பெங்கால் 11 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும், கேரள அணி 10 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.