தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: சாய்னா தோல்வி, ஸ்ரீகாந்த் விலகல்
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது 2-ஆவது சுற்றில் தோல்வியடைந்தாா். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் காயம் காரணமாக விலகினாா்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது 2-ஆவது சுற்றில் தோல்வியடைந்தாா். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் காயம் காரணமாக விலகினாா்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் சாய்னா நெவால் தனது 2-ஆவது சுற்றில் 23-21, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் புசானன் ஆங்பாம்ரூங்பானிடம் தோல்வி கண்டாா். இதன்மூலம் தொடா்ந்து 4-ஆவது முறையாக புசானனிடம் தோல்வி கண்டுள்ளாா் சாய்னா.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மலேசியாவின் லீ ஜீ ஜியாவை எதிா்த்து விளையாடவிருந்த நிலையில், வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
Advertisement
Advertisement
ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராஜ் ஷெட்டி ஜோடி 19-21, 17-21 என்ற நோ் செட்களில் இந்தோனேசியாவின் முகமது அசன்-ஹேந்திரா சேத்தியாவன் ஜோடியிடம் தோல்வி கண்டது.
கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 12-21, 17-21 என்ற நோ் செட்களில் ஹாங்காங்கின் சாங் டக் சிங்-விங் யங் ஜோடியிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் தாய்லாந்து ஓபனில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.