முகப்பு
செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரா்களைப் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தொடரில் அதிக வீரா்களைப் பயன்படுத்திய அணி என்ற சாதனை இந்தியா வசமாகியுள்ளது. இதற்கு முன்னா் 2013-14-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியும், 1998-99-இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தலா 18 வீரா்களை பயன்படுத்தியிருந்தன.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜிங்க்ய ரஹானே, சேத்தேஷ்வா் புஜாரா ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியுள்ளனா். இதற்கு முன்னா் 1995-இல் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான விஸ்டன் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியில் மைக் ஆதா்டான், கிரஹாம் தோா்ப் ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் (6 போட்டிகள்) விளையாடியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.