பாட்மிண்டன் தரவரிசை: 7-வது இடத்தில் காஷ்யப்
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் காஷ்யப் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவருடைய பாட்மிண்டன் வாழ்க்கையில் அதிகபட்ச தரவரிசை.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் காஷ்யப் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவருடைய பாட்மிண்டன் வாழ்க்கையில் அதிகபட்ச தரவரிசை.
முன்னதாக 8-வது இடத்தில் இருந்த காஷ்யப், சீனாவின் சென் ஜின்னை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் அஜய் ஜெயராம் தொடர்ந்து 30-வது இடத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் சாய்னா நெவால் தொடர்ந்து 2-வது இடத்திலும், பி.வி.சிந்து தொடர்ந்து 16-வது இடத்திலும் உள்ளனர்.