முகப்பு
செய்திகள்

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!

சின்ன மருமகள் தொடர் 1 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து..

Updated On : 15 ஜூன் 2026, 12:49 pm IST
சின்ன மருமகள் - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடர், இன்று(ஜூன் 15) முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

டிஆர்பியிலும் முன்னணியில் உள்ள சின்ன மருமகள் தொடர், ஸ்வாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் 600 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தத் தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் தாமரைச் செல்வி, பானுமதி, சங்கவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

அண்மையில், சின்ன மருமகள் தொடரில் நடிகை சுஜிதா இணைந்துள்ளது, கதையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சின்ன மருமகள் தொடரில் ஐஸ்வர்யா பாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா, இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் நடிகை ஸ்வேதா குமார் ஐஸ்வர்யா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சின்ன மருமகள் தொடர், இன்று முதல் 10.30 வரை, அதாவது ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கனா கண்டேனடி தொடர், இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

It has been announced that the serial Chinna Marumagal, currently airing on Vijay TV, will be broadcast for one hour starting today (June 15).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments