ஓடிடியில் வெளியான மதுபாலா - அபர்ணா பாலமுரளியின் புதிய படம்!
சின்ன சின்ன ஆசை திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறித்து...
மலையாள மொழிப்படமான சின்ன சின்ன ஆசை திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'.
என்டே நாராயணிக்கு என்ற குறும்படத்தை இயக்கிய வர்ஷா வாசுதேவ், இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
வாரணசியில் ஒரு நாளைக் கழிக்கும் இரு கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக சந்திக்கும் இருவருக்கு இடையே உருவாகும் அன்பையும், வாழ்க்கையையும் பற்றிய புரிதலையும் வைத்து உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், சின்ன சின்ன ஆசை திரைப்படம் இன்று(ஜூலை 28) ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் பெயர், மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் 1992-ல் வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடலைக் குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Malayalam film Chinna Chinna Aasai has been released on an OTT platform and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.