FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அன்பே டயானா! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஆக. 28 - செப். 3)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1

அன்பே டயானா

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம் அன்பே டயானா.

இந்தத் திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

Advertisement

Advertisement

2

பபிதா சிங் ரிப்போர்ட்டிங்

நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பபிதா சிங் ரிப்போர்ட்டிங்.

அம்பிகா பண்டிட் இயக்கியுள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஆக. 28-ல் வெளியாகிறது.

3

சும்பக்

அதிஷ் கபாடியா எழுதி இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சும்பக். இந்தப் படத்தில் இதில் நீனா குப்தா, தேவன் போஜானி, அர்ஜுன் பிஜ்லானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆக. 28-ல் வெளியாகிறது.

4

பந்தர்

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பாபி தியோல், சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் பந்தர்.

இந்தத் திரைப்படம் ஜீ5 தளத்தில் ஆக. 28-ல் வெளியாகிறது.

5

லர்க்

நிஷாத் இயக்கத்தில் சைஜு க்ருப், அனுமோல், அஜு வர்கீஸ், பிரகாஷ் அலெக்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லர்க்.

சர்வைவல் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஆக. 28 ஆம் தேதி வெளியாகிறது.

6

ஐ, நோபடி

நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ, நோபடி.

இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

7

கடந்த வார ஓடிடி (ஜன நாயகன்)

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஜன நாயகன்.

பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காண

8

சென்னை லவ் ஸ்டோரி

சென்னை லவ் ஸ்டோரி படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் காணலாம்.

9

ஸ்ரீனிவாச மங்காபுரம்

அஜய் பூபதி இயக்கத்தில் ஜெய கிருஷ்ணா கட்டமனேனி மற்றும் ராஷா ததானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஸ்ரீனிவாச மங்காபுரம்.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

10

மிஸ்டர் மிடில் கிளாஸ்

மிஸ்டர் மிடில் கிளாஸ் படத்தின் காட்சி - படம்: எக்ஸ்

ஜி. நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் மேகா ஸ்ரீகாந்த், லயா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் மிடில் கிளாஸ். மேலும் இந்தப் படத்தில், ராஜேந்திர பிரசாத், ரகு பாபு, வெண்ணெலா கிஷோர், பிருத்விராஜ், சுனில், நாகேஸ்வர் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.

11

பியார் பிரேமா கல்யாணம்

’பியார் பிரேமா கல்யாணம்’ எனும் புதிய படத்தை, இளன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். சான்வி மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

summary

Let us take a look at which movies are set to be released on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments