மண்டாடி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (அக். 9 - 15)
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.
மண்டாடி
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இந்தப் படம், ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சூரி நாயகனாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
Advertisement
Advertisement
பாரிஸ் கஃபே
கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைபடம் பாரிஸ் கஃபே.
இந்தத் திரைப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை(அக். 9) வெளியாகிறது.
பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்
நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது.
காவல் நிலையத்தில் காவல் துறையினரால் நடக்கும் அதிகார அத்துமீறல்கள் குறித்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றிருந்தது.
எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்
ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எபிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
கலிஃபா
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான கலிஃபா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.
டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக இந்தப் படம் உருவாகியிருந்தது.
ஐஸ்
ஐஸ் இணையத் தொடரின் பிரதான பாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக கனி குஸ்ருதி நடித்துள்ளார். மனு அசோகன் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு பாபி சஞ்சய் எழுத, அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார்.
இந்த இணையத் தொடர் நாளை சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே
டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர்.
லீஸ்ட் எலிஜிபுல் பேச்சுலர்
பாபு தேகாலா இயக்கத்தில் ஹர்ஷா செமுடு, ஐஸ்வர்யா ஹோலக்கல் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இணையத் தொடர் லீஸ்ட் எலிஜிபுல் பேச்சுலர்.
இந்தத் தொடர் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
கடந்த வார ஓடிடி (பெத்லகேம் குடும்ப யூனிட்)
பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
சர்தார் - 2
நடிகர் கார்த்தி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள சர்தார் - 2 திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
லவ்
அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ள லவ் இணையத் தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
காதலில் சொதப்புவது எப்படி, மாரி படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.
மகேந்திரகிரி வராஹி
சந்தோஷ் ஜாகர்லபுடி இயக்கத்தில் நடிகர்கள் சுமந்த், சித்து ஜொனலகட்டா, மீனாட்சி கோஸ்வாமி, பிரம்மானந்தம், வெண்ணெலா கிஷோர் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகேந்திரகிரி வராஹி.
வாராஹி கோயிலைச் சுற்றியுள்ள ரகசியங்களை கண்டறிவதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.
this week ott release movies mandadi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.