FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

மீசைய முறுக்கு - 2 முதல் நூறு கோடி வானவில் வரை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (நவ. 6 - 12)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.

1

மீசைய முறுக்கு - 2

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை (நவ. 6) வெளியாகிறது.

மேலும் இந்தப் படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

2

நூறு கோடி வானவில்

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட நூறு கோடி வானவில் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் நாயகியாக சித்தி இத்னானியின் நடித்துள்ளனர்.

நீண்ட காலம் கழித்து இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வராமல் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

3

ஐஆம் கேம்

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம்.

மேலும், இந்தப் படத்தில் கதிர், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜியோ ஹாஸ்டாரில் நாளை வெளியாகிறது.

4

7 ஸ்டார் பாய்ஸ்

நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், ஐ. எம். விஜயன் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 7 ஸ்டார் பாய்ஸ்.

இந்தத் திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

5

அனாகபள்ளி

ககேஷ் தம்மிநேனி இயக்கத்தில் விக்ரம் சஹிதேவ், சந்தியா வசிஷ்டா, தாரக் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனாகபள்ளி.

இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

6

கடந்த வார ஓடிடி (பத்தா)

இயக்குநர் பாலாஜி தரணிதரன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியின் வெளியான திரைப்படம் ’பத்தா’.

இதில், நடிகை லிஜோ மோல் ஜோஸ், இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் தனது அழுத்தமான நடிப்பை வழங்கியிருந்தார். இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

7

சிக்மா

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

தமன் இசையில் ஆக்‌ஷன் படமாக உருவான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

8

இம்மோர்டல்

ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மோர்டல் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இம்மோர்டல் திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருந்தார். கதாநாயகனாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், மகி எனும் கதாபாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மோர்டல் திரைப்படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

9

தி டார்க் ஹெவன்

ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமான நடிகர் சித்துவின் தி டார்க் ஹெவன் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றன.

தி டார்க் ஹெவன் படத்தின் நாயகனாக நடிகர் சித்து, காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ரித்விகா, தர்ஷிகா, வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லவ் ஆல்​வேஸ்

10

லவ் ஆல்​வேஸ்

கொரி​ய​ இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற ​தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்​வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இந்த இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.

11

அக்கா

‘அக்கா’ இணையத் தொடரில் கீர்த்தி சுரேஷ்

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை.

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த இணையத் தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி.

அக்கா தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

summary

Let’s take a look at which films and web series are set to be released on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.