பெத்லகேம் குடும்ப யூனிட்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (அக். 2 - 8)
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.
பெத்லகேம் குடும்ப யூனிட்
பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் நாளை(அக். 2) ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது.
Advertisement
Advertisement
சர்தார் - 2
நடிகர் கார்த்தி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள சர்தார் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று(அக்.1) வெளியானது.
இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாகவும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
லவ்
அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ள லவ் இணையத் தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.
காதலில் சொதப்புவது எப்படி, மாரி படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.
ரோமாஞ்சகம்
அறிமுக இயக்குநர் வேணு கோபால் ரெட்டி இயக்கியுள்ள ரோமாஞ்சகம் திரைப்படத்தில் சுமந்த் பிரபாஸ் மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பந்தடிக்காம் (Panthadikkaam)
இந்திய மாற்றுத்திறனாளி கால்பந்து அணியின் கேப்டனான வைசாக் பெரம்பரா வாழ்க்கை பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மலையாள மொழி இணையத் தொடர் பந்தடிக்காம்.
நிக்ஸ் லோபஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆவணத் தொடருக்கு நடிகர் மம்முட்டி குரல் கொடுத்துள்ளார். இந்தத் தொடரை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
மதர் ப்ராமிஸ்
பூர்ணச்சந்திர மைசூர் இயக்கத்தில் தனஞ்சய், பூர்ணச்சந்திர மைசூர், கீதா, வினய் பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ள கன்னட மொழித்திரைப்படம் மதர் ப்ராமிஸ்.
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மகேந்திரகிரி வராஹி
சந்தோஷ் ஜாகர்லபுடி இயக்கத்தில் நடிகர்கள் சுமந்த், சித்து ஜொனலகட்டா, மீனாட்சி கோஸ்வாமி, பிரம்மானந்தம், வெண்ணெலா கிஷோர் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகேந்திரகிரி வராகி.
வாராஹி கோயிலைச் சுற்றியுள்ள ரகசியங்களை கண்டறிவதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது.
அமீர் லாக்
சோம ரமண ரெட்டி இயக்கத்தில் நடிகர்கள் ஹரி முன்னங்கி, சசிதர் கோச்சர்லகோடா, மனோஜ் ஆவுலா, வேதா ஜலந்தர், ராவன் நித்துரு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அமீர் லாக்.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
கடந்த வார ஓடிடி (ஹபீபி)
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ஹபீபி திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அங்கீகாரம்
இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ராஜேஷ் நடித்து வெளியான அங்கீகாரம் திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹாய்
கவின் - நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் வெளியான ஹாய் திரைப்படத்தை ஜீ ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தப் படத்தில் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
this week ott release movies sardar 2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.