ஊதா தொப்பி: வினய் குமார் மகிழ்ச்சி
ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்து வீச்சாளர்களின் தலையை அலங்கரித்து வரும் ஊதா நிறத் தொப்பியை பெற்றுள்ளது குறித்து
ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்து வீச்சாளர்களின் தலையை அலங்கரித்து வரும் ஊதா நிறத் தொப்பியை பெற்றுள்ளது குறித்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வினய் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இத்தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். இப்போட்டித் தொடரில் ஊதா தொப்பி அடிக்கடி இடம் மாறி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரேன், சன்ரைசர்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 11 விக்கெட்டுகளும் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஊதா தொப்பி கெüரவம் கிடைத்துள்ளது குறித்து வினய் குமார் கூறியது: இப்போதைய நிலையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர் வரும் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி இப்பெருமையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பேன் என்றார்.
அதிக ரன்களை எடுக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் சிவப்பு நிறத் தொப்பி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலியிடம் உள்ளது.
Advertisement