முகப்பு
விளையாட்டு

டெல்லிக்கு 137 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸூக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Updated On : 2 மே 2013, 1:11 am IST
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸூக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

முதலில் பேட் செய்த நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் கேப்டன் கம்பீர் பேட்டிங்கை தேர்வு செய்தார். மன்விந்தர் பிஸ்லாவும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

Advertisement

Advertisement

முதல் ஓவரின் முதல் பந்தில் பிஸ்லா பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் கம்பீர் ஆட்டமிழந்தார். அவர் ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில், இர்ஃபான் பதானால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. பிஸ்லா 4, யூசுப் பதான் 20, மோர்கன் 10, காலிஸ் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது நைட் ரைடர்ஸ்.

இதன்பிறகு வந்த தேவவிரத தாஸ் 18, சமித் நர்வால் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஜத் பாட்டியா-பிரெட்லீ ஜோடி 10 பந்துகளில் 22 ரன்களை விளாச, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது நைட் ரைடர்ஸ்.

நெஹ்ரா வீசிய கடைசி ஓவரில் பிரெட் லீ இரு சிக்ஸர்களை விளாசினார். பிரெட் லீ 6 பந்துகளில் 16, ரஜத் பாட்டியா 26 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், இர்ஃபான் பதான், நெஹ்ரா, மோர்கல், நதீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.