மும்பைக்கு எளிதான வெற்றி
புணே வாரியர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மும்பை இண்டியன்ஸ்.
புணே வாரியர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மும்பை இண்டியன்ஸ்.
முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற புணே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராபின் உத்தப்பாவும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் அந்த அணியின் இன்னிங்ûஸ தொடங்கினர்.
Advertisement
மும்பை பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால், ரன் எடுக்கத் தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 10 ரன்களிலும், உத்தப்பா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
யுவராஜ் சிங் 33: இதன்பிறகு மணீஷ் பாண்டேவும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி ஓரளவு சிறப்பாக ஆடியதால் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஓஜா வீசிய 11-வது ஓவரில் யுவராஜ் சிங், அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசினார்.
அந்த அணி 84 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. மணீஷ் பாண்டே 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேத்யூஸ் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ரன் அவுட்டாக, யுவராஜ் சிங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் இந்த ரன்களை எடுத்தார்.
இதன்பிறகு சரிவுக்குள்ளான அந்த அணியால், கடைசி வரை அதிலிருந்து மீள முடியவில்லை. ஆட்டத்தின் கடைசிப் பந்தை புவனேஸ்வர் குமார் சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லையில் நின்ற வேயன் ஸ்மித், இடது கையால் அற்புதமாகக் கேட்ச் செய்ய, புணே 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்தது.
அதிர்ச்சி தொடக்கம்: பின்னர் ஆடிய மும்பை அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வேயன் ஸ்மித் விக்கெட்டை இழந்தது. திண்டா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் போல்டானார்.
சச்சின் 13 பந்துகளில் 15, தினேஷ் கார்த்திக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் சர்மாவும், அம்பட்டி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. அம்பட்டி ராயுடு 23 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா 37: இதன்பிறகு களம்புகுந்த கிளன் மேக்ஸ்வெல், திண்டா வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, ஸ்கோர் சமநிலையை எட்டியது. ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹர்பஜன் சிங் பவுண்டரி அடிக்க, மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இதன்மூலம் 9-வது வெற்றியை ருசித்த மும்பை இண்டியன்ஸ், 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியிருப்பதோடு, அடுத்த சுற்று வாய்ப்பையும் நெருங்கியுள்ளது. அதேநேரத்தில் புணே வாரியர்ஸ் 12-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
கிளன் மேக்ஸ்வெல் அறிமுகம்: கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியால் ரூ.5.31 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல், இந்த ஆட்டத்தில்தான் முதன்முறையாக களமிறங்கினார். போலார்டுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக மேக்ஸ்வெல்லுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. மும்பை அணிக்காக முதல் போட்டியில் விளையாடுவதற்காக 12 ஆட்டங்கள் காத்திருந்த மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் அறிமுகப் போட்டி.
ஸ்கோர் போர்டு
புணே வாரியர்ஸ்
விக்கெட் வீழ்ச்சி: 1-13 (பிஞ்ச்), 2-25 (உத்தப்பா), 3-84 (பாண்டே),
4-85 (மேத்யூஸ்), 5-85 (யுவராஜ் சிங்), 6-99 (ரிச்சர்ட்ஸன்),
7-109 (நய்யார்), 8-112 (குமார்).
பந்து வீச்சு: மிட்செல் ஜான்சன் 4-0-8-2, அபு நெசிம் அஹமது 4-0-27-2, லசித் மலிங்கா 4-0-27-2, பிரக்யான் ஓஜா 3-0-28-0,
ஹர்பஜன் சிங் 4-0-14-1, கிளன் மேக்ஸ்வெல் 1-0-5-0.
மும்பை இண்டியன்ஸ்
விக்கெட் வீழ்ச்சி: 1-0 (ஸ்மித்), 2-25 (சச்சின்), 3-39 (கார்த்திக்), 4-93 (ராயுடு), 5-112 (ரோஹித்).
பந்து வீச்சு: அசோக் திண்டா 4-0-35-2, புவனேஸ்வர் குமார் 2-0-12-0,
கேன் ரிச்சர்ட்ஸன் 3.5-0-28-1, அஜந்தா மெண்டிஸ் 4-0-15-1,
யுவராஜ் சிங் 4-0-21-1, பர்வேஸ் ரசூல் 1-0-5-0.