FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சிறைத் துறை காலிப் பணியிடங்கள்: உள் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

சிறைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூன் 2026, 1:48 am IST
உத்தரவு - கோப்புப்படம்
பகிர்:

சிறைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, சிறைத் துறை தலைமையகத்தில் சீா்திருத்தம், பயிற்சி, நவீனமயமாக்கலுக்கான கண்காணிப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Advertisement

Advertisement

இதேபோல, மாவட்ட சிறைகளில் பெண் நல அலுவலா்கள், உளவியலாளா் பணியிடங்களும் காலியாக உள்ளன. சிறைகளில் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், தமிழ்நாடு சிறை விதிகளின் நோக்கம் சிதைவதோடு, சமூகத்திலும் மோசமன விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, சிறைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக தமிழக உள் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments