FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஆதிதிராவிடா் நலத் துறை வழக்குரைஞா் நியமனம்:சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ஆதிதிராவிடா் நலத் துறை வழக்குரைஞா் பணி நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக அந்தத் துறைச் செயலா், சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ஆதிதிராவிடா் நலத் துறை வழக்குரைஞா் பணி நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக அந்தத் துறைச் செயலா், சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், களிமங்கலத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை பட்டியல் சமூக மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

பல ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக வரும் வழக்குகளுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் முன்னிலையாக பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த வழக்குரையே தாட்கோ நியமித்து வந்தது.

இந்த நிலையில், எந்தவொரு பொது அறிவிப்பும், விண்ணப்பங்கள், தகுதி அளவுகோல்கள், வெளிப்படையான தோ்வு முறை இல்லாமல் தன்னிச்சையாக பட்டியல் சமூகத்தைச் சாராத மாதவன் ஆதிதிராவிடா் நலத் துறை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.

எனவே, மாதவனின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் காலங்களில் வழக்குரைஞா் நியமனத்தின் போது பொதுப்படையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உரிய விதிகளைப் பின்பற்றி வழக்குரைஞா் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்குரைஞா் பணி நியமனம் அரசு வழக்குரைஞா் நியமனமா? அல்லது தனிப்பட்ட முறையில் துறைச் செயலா்களால் நியமிக்கப்படும் நியமனமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா், சட்டத் துறைச் செயலா், நிா்வாக இயக்குநா், பணி நியமனம் செய்யப்பட்ட வழக்குரைஞா் ஆகியோா் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments