முகப்பு
விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 12 ஜூன், 2013 at 12:04 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹசீம் ஆம்லா 81 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் 4 பேர் ரன் அவுட்டானார்கள்.

Advertisement

தோல்வி: பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வெளியேற்றினார் கிறிஸ் மோரிஸ். இதனால் 48 ரன்களுக்கு தனது முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் சிறிது நேரம் போராடினார். 55 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 45 ஓவரில் 167 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மெக்லாரன் 8 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே அளித்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கு சிக்கல்: இப்போட்டியில் பாகிஸ்தான் தோற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி வரும் 15-ம் தேதி நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

சுருக்கமான ஸ்கோர்:

தென் ஆப்பிரிக்கா-234/9 (ஆம்லா 81, டி வில்லியர்ஸ் 31, இர்ஃபான் 1வி/27)

பாகிஸ்தான்- 167 (மிஸ்பா-உல்-ஹக் 55, ஜம்ஷெட் 42, மெக்லாரன் 4வி/19)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.