முகப்பு
விளையாட்டு

ஆசிய தடகளம்: 110 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

புணேவில் ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூன் 2013, 1:42 am IST
பகிர்:

புணேவில் ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா சிங் (மகளிர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ்), விகாஸ் கெüடா (வட்டு எறிதல்), கிருஷ்ணா பூனியா (மகளிர் வட்டு எறிதல்), தின்டு லூக்கா (மகளிர் 800 மீ. ஓட்டம்) என மொத்தம் 110 பேர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆடவர் பிரிவில் 57 பேரும், மகளிர் பிரிவில் 53 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஆடவர் பிரிவில் 7 பேரும், மகளிர் பிரிவில் 7 பேரும் இடம்பெற்றுள்ளனர். புதுக்கோட்டை லட்சுமணன் ஆடவர் 5000 மீ ஓட்டம், 10000 மீ. ஓட்டம் என இரு பிரிவுகளிலும் வாய்ப்பு பெற்றுள்ளார். அதன் விவரம்:

Advertisement

Advertisement

ஆடவர் பிரிவு: விஜய் குமார் (100 மீ. ஓட்டம்), ஆரோக்கிய ராஜீவ் (400 மீ. ஓட்டம்), சகாய ராஜா பிரான்சிஸ் (800 மீ. ஓட்டம்), லட்சுமணன் (5000 மீ., 10000 மீ. ஓட்டம்), நிகில் சிற்றரசு (உயரம் தாண்டுதல்), பிரேம் குமார் (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஷ்வரி (மும்முறைத் தாண்டுதல்).

மகளிர் பிரிவு: சாரதா நாராயணன் (100 மீ. ஓட்டம்), இளவரசி (400 மீ. ஓட்டம்), கோமதி (800 மீ. ஓட்டம்), சூர்யா (5000 மீ., 10000 மீ. ஓட்டம்). காயத்ரி, ஹேமாஸ்ரீ (100 மீ. தடை தாண்டும் ஓட்டம்), சுரேகா (கம்பு ஊன்றித் தாண்டுதல்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.