முகப்பு
விளையாட்டு

இந்தியாவுடனான கடைசி டி20: தென்னாப்பிரிக்க மகளிர் வெற்றி

Updated On : 28 ஏப்ரல் 2026, 5:58 am IST
பகிர்:

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை ஏற்கெனவே தன்வசப்படுத்திய தென்னாப்பிரிக்கா, தற்போது 4}1 என்ற கணக்கில் அதை கைப்பற்றியது.

கடைசி ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் சேர்க்க, இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்களே எடுத்தது.

Advertisement

Advertisement

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில், சுனே லூஸ் 23, தஸ்மின் பிரிட்ஸ் 2, ஆனெரி டெர்க்சென் 0, அனிகே பாஷ் 8, கிளோ டிரையான் 12, நாடின் டி கிளெர்க் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

ஓவர்கள் முடிவில், கேப்டன் லாரா வோல்வார்ட் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 92, சினோலா ஜாஃப்தா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பெüலர்களில் ரேணுகா சிங், ஸ்ரீசரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக பார்தி ஃபுல்மாலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்து வீழ, கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

ஷஃபாலி வர்மா 4, அனுஷ்கா சர்மா 17, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1, தீப்தி சர்மா 8, அருந்ததி ரெட்டி 1, கிராந்தி கெüட் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.

ஓவர்கள் முடிவில், ரிச்சா கோஷ் 25, ஸ்ரீசரணி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் நாடின் டி கிளெர்க், நோன்குலுலேகோ லாபா ஆகியோர் தலா 2, எலிஸ் மார்க்ஸ், கிளோ டிரையான், அயபோங்கா ககா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், கடைசி ஆட்டத்தில் 92 ரன்கள் அடித்ததற்காக ஆட்டநாயகி விருதையும், 5 ஆட்டங்களிலுமாக 330 ரன்கள் சேர்த்ததற்காக தொடர்நாயகி விருதையும் வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments