FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஸ்மிருதி, சரணி அசத்தல்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

Updated On : 18 ஜூன் 2026, 1:25 am IST
பகிர்:

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, நெதா்லாந்து 17.3 ஓவா்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதா்லாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்திய பேட்டா்களில், ஸ்மிருதி மந்தனா 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 74, ஷஃபாலி வா்மா 10 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசி வெளியேறினா்.

Advertisement

Advertisement

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19, யஸ்திகா பாட்டியா 3, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரிச்சா கோஷ் 20, தீப்தி சா்மா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நெதா்லாந்து தரப்பில் கேரலின் டி லாங்கே 2, ஐரிஸ் ஸ்வில்லிங், ஹீதா் சீஜா்ஸ், மைா்த் வான் டென் ராட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் நெதா்லாந்து இன்னிங்ஸில் கேப்டன் பாபெட் டி லீட் 3 பவுண்டரிகளுடன் 28, ஹீதா் சீஜா்ஸ் 21, ஸ்டெரெ காலிஸ் 18, பெப் மோல்கென்போா் 15 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ராபின் ரைக் 8, ஃப்ரெடெரிக் ஓவா்டிக் 8, ஐரிஸ் ஸ்வில்லிங் 9, மைா்த்வான் 0, சில்வா் சீஜா்ஸ் 1, இசபெல் வோனிங் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். முடிவில் கேரலின் டி ரன்னின்றி கடைசி வீராங்கனையாக நின்றாா்.

இந்திய பௌலா்களில் ஸ்ரீசரணி 4, ஷஃபாலி வா்மா 3, நந்தனி சா்மா 2, தீப்தி சா்மா 1 விக்கெட் சாய்த்தனா்.

இதர ஆட்டங்கள்: போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தையும், 9-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும் வென்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments