முகப்பு
கிரிக்கெட்

14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 9 பிப்ரவரி 2025, 2:49 pm IST
கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. காலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 257 மற்றும் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி 75 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

Advertisement

Advertisement

டிராவிஸ் ஹெட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 27 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

14 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி, இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு, 1-0 என்ற கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.

அதன் பின், கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தற்போது, ஆஸ்திரேலிய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரிக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments