மீண்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் கேப்டனாக செயல்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படவுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் கேப்டனாக செயல்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படவுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
நைட் கிளப்பில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், அணியை ஜோ ரூட் கேப்டனாக வழிநடத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
நைட் கிளப் சம்பவம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனும் மூன்றாவது போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 25 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
While Joe Root captained the team in the second Test against New Zealand, Ben Stokes will be the captain in the third Test.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.