முகப்பு
கிரிக்கெட்

எழுதி வைத்ததை எட்டிவிட்டேன்! - பிரஃபுல் ஹிங்கே

ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் சாய்த்த முதல் பெüலராக பிரஃபுல் ஹிங்கே சாதனை படைத்திருக்கிறார். மேலும், ஐபிஎல் போட்டியின் அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் சாய்த்தவர்கள் வரிசையில் 7-ஆவது வீரராக இணைந்துள்ளார்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:39 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:36 AM

"எனது அறிமுக ஆட்டத்தில் 4 அல்லது 5 விக்கெட்டுகள் எடுப்பேன் என்று முன்பு எதிலோ நான் எழுதி வைத்திருந்தேன். அதை இப்போது நான் எட்டியிருக்கிறேன்' என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெüலர் பிரஃபுல் ஹிங்கே கூறினார்.

ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் சாய்த்த முதல் பெüலராக பிரஃபுல் ஹிங்கே சாதனை படைத்திருக்கிறார். மேலும், ஐபிஎல் போட்டியின் அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் சாய்த்தவர்கள் வரிசையில் 7-ஆவது வீரராக இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் உள்பட, மொத்தமாக 4 விக்கெட்டுகள் சாய்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரஃபுல், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Advertisement

இந்த சீசனில் தோல்வியே சந்திக்காமல் 4 ஆட்டங்களிலும் வென்ற உத்வேகத்துடன் இந்த ஆட்டத்துக்கு ராஜஸ்தான் வந்திருந்தது. 217 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இன்னிங்ûஸ தொடங்கிய அந்த அணிக்கு, ஹைதராபாத் தரப்பிலிருந்து அறிமுக பெüலர் பிரஃபுல் ஹிங்கே பெüலிங் செய்தார்.

ஜஸ்பிரீத் பும்ரா பெüலிங்கையே சிக்ஸருக்கு பறக்கவிட்டவரும், அதிரடி ஆட்டத்தை அடையாளமாகக் கொண்டவருமான ராஜஸ்தான் பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி, பிரஃபுல் வீசிய 2-ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த துருவ் ஜுரெல் அதே ஓவரின் 4-ஆவது பந்தில் சாய்க்கப்பட, 4-ஆவது பேட்டராக களம் புகுந்த லுவான் டிரெ பிரெடோரியஸ், அந்த ஓவரின் கடைசி பந்தில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.

மூவருமே டக் அவுட்டாக, பிரஃபுல் ஹிங்கே தனது அறிமுக ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் 3-ஆவது ஓவரை வீசியபோது ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கையும் வெளியேற்றிய அவர், ராஜஸ்தான் அணியை முற்றிலுமாக தடுமாறச் செய்தார்.

4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்த அவர், ஆட்டத்துக்குப் பிறகு பேசுகையில், "எனது அறிமுக ஆட்டத்தில் 4 அல்லது 5 விக்கெட்டுகள் வீழ்த்துவேன் என்று எதிலோ எழுதி வைத்திருந்தேன். பவர்பிளேயில் என்னால் ஆதிக்கம் செலுத்த முடியும் என நினைத்தேன். அதைத் தற்போது செய்திருக்கிறேன்.

13 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். முதலில் லெதர் பந்து கிரிக்கெட் குறித்து தெரியாத நிலையில், கிரிக்கெட் கிளப்புகளில் இணைந்து விளையாடத் தொடங்கிய பிறகு அதில் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை பெüன்சர் பந்து மூலமாக எடுக்க முடியும் என நம்பினேன். அதற்கான திட்டத்தை எங்கள் பெüலிங் பயிற்சியாளர் வருண் ஆரோன் ஏற்படுத்திக் கொடுக்க, அவ்வாறே விக்கெட் எடுத்தேன். இந்த ஆட்டநாயகன் விருதை எனது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன்' என்றார்.

விதர்பா அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிரஃபுல் ஹிங்கே, அந்த அணிக்காக ரஞ்சி, சையது முஷ்டாக் அலி கோப்பை ஆகிய போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்த சீசனில் ஹைதராபாத் அணி இவரை, அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.