முகப்பு
ஐபிஎல்

இறுதிக்குச் செல்லப்போவது யார்? குவாலிஃபயர் 2-ல் குஜராத் - ராஜஸ்தான் இன்று மோதல்!

ஐபிஎல் போட்டியின் "குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

Updated On : 29 மே 2026, 10:33 am IST
பகிர்:

ஐபிஎல் போட்டியின் "குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

இதில் குஜராத் அணி குவாலிஃபயர் 1-க்கு தகுதிபெற்றபோதும், அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிடம் தோல்வி கண்டு முதல் வாய்ப்பை இழந்தது. 2-ஆவது வாய்ப்பாக இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி, இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது.

குஜராத் அணியைப் பொருத்தவரை, பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அதன் டாப் ஆர்டர் பேட்டர்களான கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் சோபிக்காமல் போனதே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் அவர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

அந்த ஆட்டத்தில் கை கொடுத்த ராகுல் தெவாதியா, இதிலும் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

அணியின் பௌலிங்கில் ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பெங்களூருக்கு எதிராக விக்கெட்டுகள் சரித்தனர். அவர்களுடன் முகமது சிராஜ், ரஷீத் கான் ஆகியோரும் ராஜஸ்தான் பேட்டர்களுக்கு சவால் அளித்தால், அணிக்கு சாதகமாக இருக்கும்.

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை, அதன் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி "ரெட் ஹாட்' ஃபார்மில் இருக்கிறார். அவர் தனது வழக்கமான அதிரடியைத் தொடரும் பட்சத்தில், ராஜஸ்தானுக்கு பலம் பெறும். ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார்.

துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரியான் பராக், டோனோவன் ஃபெரெய்ரா ஆகியோரும் கை கொடுத்தால், ராஜஸ்தான் நிச்சயம் சவால் அளிக்கும். பெüலிங்கில் ஆர்ச்சர், நாண்ட்ரே பர்கர் ஆகியோர் நம்பகமான வீரர்களாக இருக்க, ரவீந்திர ஜடேஜா, யஷ்ராஜ் பஞ்சா ஆகியோரும் கடந்த ஆட்டத்தைப் போலவே தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.