FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று முதல் அரையிறுதி: இந்தியா - வங்கதேசம் மோதல்

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா - வங்கதேச அணிகள் வியாழக்கிழமை (செப். 10) மோதுகின்றன.

10 செப்டம்பர் 2026, 5:33 am IST
- X | BCCI Women
பகிர்:

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா - வங்கதேச அணிகள் வியாழக்கிழமை (செப். 10) மோதுகின்றன.

7 முறை சாம்பியனான இந்தியா, குரூப் சுற்றில் ஹாட்ரிக் வெற்றி கண்டு, அபார நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு வந்துள்ளது. ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். பௌலிங்கில் தீப்தி சா்மா, ராதா யாதவ், ஸ்ரீசரணி சவால் அளிக்கவுள்ளனா்.

வங்கதேச அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் அரையிறுதியை அடைந்திருக்கிறது. பேட்டிங்கில் ஷோபனா மோஸ்தரி, கேப்டன் நிகா் சுல்தானா, ஷா்மின் அக்தா் என, ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒருவா் கை கொடுத்து வந்துள்ளனா். பௌலிங்கில் நஹிதா அக்தா், மருஃபா அக்தா், ரபெயா கான் நம்பிக்கை அளிக்கின்றனா்.

Advertisement

Advertisement

டி20 கிரிக்கெட்டில் இந்தியா - வங்கதேசம் இதுவரை 24 ஆட்டங்களில் மோதியிருக்க, இந்தியா 21 வெற்றிகளும், வங்கதேசம் 3 வெற்றிகளும் கண்டுள்ளன.

நேரம்: இரவு 8 மணி

இடம்: துபை

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லிவ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments