மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.
Advertisement
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை அணியின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா மற்றும் மிட்செல் சாண்ட்னர் இடம்பெறவில்லை. குயிண்டன் டி காக் மற்றும் அறிமுக வீரர் மயங்க் ராவத் மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.