முகப்பு
கிரிக்கெட்

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

சிஎஸ்கே வீரர்கள் - படம் | AP
பகிர்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

மும்பை அணியின் பிளேயிங் லெவனில் அஷ்வனி குமாருக்குப் பதிலாக கிரிஷ் பகத் சேர்க்கப்பட்டுள்ளார். ரகு சர்மா அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குர்ஜப்நீத் சிங்குக்குப் பதிலாக ராமகிருஷ்ணா கோஷும், அகீல் ஹொசைனுக்குப் பதிலாக பிரசாந்த் வீரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

summary

In the IPL match against Chennai Super Kings, Mumbai Indians won the toss and elected to bat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments