99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது ஏற்கத்தக்கதல்ல: ஹைடன்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியுற்றது பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணி பயிற்சியாளரின் பேட்டி...
மும்பைக்கு எதிராக தோல்வியுற்றது பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரின் மேத்திவ் ஹைடன், “99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுறுவது ஏற்கத்தக்கதல்ல” எனக் கூறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றிரவு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 199/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 ஓவர்களில் 44/3 ரன்கள் எடுத்தது. பின்னர், கடைசி நான்கு ஓவர்களில் 73 ரன்கள் குவித்து அசத்தியது. குஜராத் அணி 15.5 ஓவர்களில் ஆல் அவுட்டானது.
Advertisement
குறிப்பாக, இந்தப் போட்டியில் திலக் வர்மா முதலில் 22 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தவர், ஹார்திக் பாண்டியாவின் உத்வேக பேச்சுக்குப் பிறகு, அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். மொத்தமாக, 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளர் ஹைடன் பேசியிருப்பதாவது:
100 (99) ரன்கள் வித்தியாசத்தில் தோற்போம் என நினைக்கவில்லை. குறைவான வித்தியாசத்தில் தோல்வியுற்றிருக்கலாம். எங்களது பேட்டிங் ஆர்டரிடம் இருந்து வந்த இது ஏற்கத்தக்கதல்ல. இன்று எங்களுக்கு மிகவும் மோசமான நாள்.
உண்மையைச் சொல்லப்போனால், ரபாடா பந்துவீச்சைத் தவிர எதுவும் இன்று எங்களுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. அதனால், நாங்கள் நிச்சயமாக சில வேலைகளைச் செய்தாக வேண்டியிருக்கிறது.
எங்களது பேட்டிங் வரிசையில் அற்புதமான வீரர்கள் இருக்கிறார்கள். மேம்பட்ட மனநிலையில், மேம்பட்ட சூழநிலையில் அவர்கள் தங்களது வாய்ப்புகளைப் பயன்படுத்திருக்க வேண்டும். குஜ்ராத் டைட்டன்ஸ் அணி உருவானதில் இருந்தே இதுதான் எங்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
20 ஓவர் போட்டியில் 100 (99) ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று, இங்கு மகிழ்ச்சியாக உட்கார்ந்திருக்க முடியாது. எங்களது காலத்தில் 100 ரன்கள் என்பது 50 ஓவர்கள் போட்டியிலேயே வெற்றிக்கான ரன்களாக இருந்தது.
மிடில் ஆர்டர் பேட்டிங் இன்று வெளிச்சத்துக்கு வந்தது. 6 ஓவர்களில் அவர்கள் பேட்டிங்கிற்கு வரும்போது, நீங்கள் பிரச்னையில் இருப்பதென்று அர்த்தம். இந்த மாதிரியான் ரன் சேஸிங்கில் பவர்பிளேவிலே வெல்ல முடியாது, அதே சமயம், தோற்கவும் கூடாது என்றார்