முகப்பு
கிரிக்கெட்

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

ஐபிஎல் 2026ல் சிறப்பாக பேட்டிங் விளையாடும் அபிஷேக் சர்மா குறித்து...

Updated On : 21 ஏப்ரல் 2026, 8:25 pm IST
அபிஷேக் சர்மா. - படம்: ஐபிஎல்
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். 25 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா தனது ஃபார்மை தொடர்ந்துகொண்டு வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபிஷேக் சன்ரைசர்ஸ் அணிக்கு 6 அரைசதம் அடித்துள்ளார். அதில் இதுதான் மிகவும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, தில்லி அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடிய அபிஷேக் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடத்தைப் பிடிக்கும். அதனால், இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

summary

Abhishek sharma in prime touch in ipl 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.