ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி குறித்து...
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி ஆரஞ்ச் கேப்பை வென்றுள்ளார். நேற்று சின்னசாமி திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் 81 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 205/3 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 206/5 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியுடன் ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தச் சிறப்பான பேட்டிங்கின் மூலமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருதுடன் ஆரஞ்ச் கேப் விருதும் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
நடப்பு சீசனில் விராட் கோலி 328 ரன்களில் முதலிடம் வகிக்க, அபிஷேக் சர்மா 323 ரன்களில் இரண்டாமிடத்தில் இருக்கிறார். சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சனும் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் விவரம்
1. விராட் கோலி - 328 ரன்கள் (ஆர்சிபி)
2. அபிஷேக் சர்மா - 323 ரன்கள் (சன்ரைசர்ஸ்)
3. ஹென்ரிச் கிளாசன் - 320 ரன்கள் (சன்ரைசர்ஸ்)
4. ஷுப்மன் கில் - 297 ரன்கள் (குஜராத்)
5. சஞ்சு சாம்சன் - 293 ரன்கள் (சிஎஸ்கே)
Virat Kohli Wins Orange Cap! RCB Climbs to 2nd Place!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.