ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்
ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மேயர் 34 பந்துகளில் 85 ரன்கள் (7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 3-வது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மேயர் பேட்டிங் செய்த விதம், அவரது ஆட்டத்தை பின்வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீணாக்கிவிட்டதோ என்பது போன்று இருந்தது. அவர் மிகவும் அற்புதமான வீரர். அவரால் எந்த ஒரு சூழலுக்கு ஏற்பவும் சுழல் மற்றும் வேகப் பந்துவீச்சுக்கு எதிராக விளையாட முடியும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக அவர் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அணியின் சொத்து அவர்தான்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹெட்மேயருக்கு மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். அவர் அதிரடியாக விளையாடுவது மேற்கிந்தியத் தீவுகளின் தன்னம்பிக்கையை உண்மையில் மிகவும் அதிகரித்துள்ளது என்றார்.
West Indies captain Shai Hope has said that Shimron Hetmyer is an asset to the team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.