வங்கதேச சுற்றுப் பயணம்: ஒருநாள் தொடரை இழந்த ஆஸி.க்கு டி20யில் முதல் வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலியா குறித்து...
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
சட்டோகிராமில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஸாம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகளும் மாட் ரென்ஷா 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
Advertisement
Advertisement
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 133/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக கூப்பர் கானலி 47 ரன்கள் எடுத்தார்.
டிம் டேவிட் 20, மாட் ரென்ஷா 18, நிகில் சௌதரி 18 என அனைவரது பங்களிப்பில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஒருநாள் தொடரை 1-2 என இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு டி20 தொடரை வெல்லும் தனது முனைப்பை முதல் போட்டியிலேயே காட்டியிருக்கிறது.