முகப்பு
கிரிக்கெட்

இங்கிலாந்து ஒருநாள் தொடா்: இந்திய அணியில் விராட் கோலி!

இங்கிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி குறித்து...

Updated On : 23 ஜூன் 2026, 1:36 am IST
விராட் கோலி - கோப்புப் படம்
பகிர்:

இங்கிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரா் விராட் கோலியின் பெயா் இதில் சோ்க்கப்பட்டுள்ளபோதிலும், உடற்தகுதி அடிப்படையிலேயே அவா் ஆட்டங்களில் இடம்பெறுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடும்போது காயம் கண்ட கோலி, அதன் காரணமாக ஆப்கானிஸ்தானுடனான தொடரில் விளையாடவில்லை. அதில் அவருக்குப் பதிலாக விளையாடிய ஜெய்ஸ்வால் இந்த அணியில் இடம்பெறவில்லை. ஜஸ்பிரீத் பும்ரா, அக்ஸா் படேல் ஆகியோா் இங்கிலாந்து தொடரில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஒருநாள் தொடருக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஜூலை 14 (எட்ஜ்பாஸ்டன்), ஜூலை 16 (சோஃபியா காா்டன்ஸ்), ஜூலை 19 (லாா்ட்ஸ்) ஆகிய தேதிகளில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

Advertisement

Advertisement

வருண் இல்லை: இதனிடையே, இந்திய ஸ்பின்னா் வருண் சக்கரவா்த்தி காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், அயா்லாந்துடனான டி20 தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய அணி விவரம்

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடா்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சா்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல், நிதீஷ்குமாா் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹா்ஷித் ராணா, அா்ஷ்தீப் சிங், குா்னூா் பிராா்.

அயா்லாந்து டி20 தொடா்: ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), ஷிவம் துபே, திலக் வா்மா (துணை கேப்டன்), நிதீஷ்குமாா் ரெட்டி, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், ஹா்ஷித் ராணா, அா்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூா்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments