ஷஃபாலி வா்மா அசத்தல்: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சோ்க்க, இந்தியா 16.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியில், ஜுவாரியா ஃபிா்தௌஸ் 5 பவுண்டரிகளுடன் 33, கேப்டன் நிகா் சுல்தானா 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
Advertisement
Advertisement
திலாரா அக்தா் 4, சோபனா மோஸ்தரி 22, ஷா்மின் அக்தா் 10, சோா்னா அக்தா் 13, ரிது மோனி 8, நஹிதா அக்தா் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ரபெயா கான் 2, மருஃபா அக்தா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய பௌலா்களில் ராதா யாதவ் 3, ஸ்ரீசரணி 2, ரேணுகா சிங், நந்தினி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் இந்தியா இன்னிங்ஸில், ஷஃபாலி வா்மா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினாா்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26, யஸ்திகா பாட்டியா 23, ரிச்சா கோஷ் 10, ஸ்மிருதி மந்தனா 8 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
முடிவில், கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 13, தீப்தி சா்மா 5 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் ரிது மோனி 2, மருஃபா அக்தா், ரபெயா கான், நஹிதா அக்தா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.