ஃபின் ஆலனைப் போன்று சில வீரர்களால் மட்டுமே விளையாட முடியும்: மார்க் பௌச்சர்
உலக கிரிக்கெட்டில் சில வீரர்களால் மட்டுமே ஃபின் ஆலனைப் போன்று விளையாட முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட்டில் சில வீரர்களால் மட்டுமே ஃபின் ஆலனைப் போன்று விளையாட முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (மே 8) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் சதம் விளாசி அணிக்கு வெற்றிப் பெற்றுத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் (5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ஃபின் ஆலனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், உலக கிரிக்கெட்டில் சில வீரர்களால் மட்டுமே ஃபின் ஆலனைப் போன்று விளையாட முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஃபின் ஆலன் 20 அல்லது 30 ரன்களைக் கடந்துவிட்டால், அவரைப் போன்று அதிரடியாக உலக கிரிக்கெட்டில் வெகு சில வீரர்களால் மட்டுமே விளையாட முடியும். அவரது பலம் மட்டுமே அவரை சிறப்பான வீரராக மாற்றவில்லை. ஷாட்டுகளை அவர் தேர்ந்தெடுத்து அதிரடியாக விளையாடும் விதம் சிறப்பாக உள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அவர் அற்புதமான பல ஷாட்டுகளை விளையாடினார். ஒரு கட்டத்தில் பந்துவீசும் இயந்திரத்துக்கு எதிராக சிக்ஸர் அடித்து பயிற்சி மேற்கொள்வது போன்று அவர் விளையாடினார். அவரது இன்னிங்ஸ் நம்பமுடியாத விதத்தில் இருந்தது என்றார்.
Former South African player Mark Boucher has stated that only a few players in world cricket can play like Finn Allen.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.