தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள்; கே.எல்.ராகுல் தனித்துவமான சாதனை!

ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள் குவித்து கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.

News image

கே.எல்.ராகுல் - படம் | ஐபிஎல்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள் குவித்து கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (மே 8) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி 1000 ரன்கள் குவித்துள்ள முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள கே.எல்.ராகுல், அந்த அணிகளுக்காக 1000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அதேபோல, தில்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 23 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுல் 1000 ரன்களைக் கடந்துள்ளார். முன்னதாக, ஜேபி டுமினி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் 35 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்திருந்ததே அதிவேகமானதாக இருந்தது.

மூன்று வெவ்வேறு அணிகளுக்காக கே.எல்.ராகுல் 1000+ ரன்கள்

பஞ்சாப் கிங்ஸ் - 2548 ரன்கள்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 1410 ரன்கள்

தில்லி கேபிடல்ஸ் - 1002 ரன்கள்

Summary

K.L. Rahul has set a record by scoring 1,000 runs for three different teams in the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.